திருநெல்வேலி அரசு பேருந்து கோட்ட நிர்வாக இயக்குநருடன் டெக்னிக்கல் ஊழியர்கள் சந்திப்பு. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 24 July 2023

திருநெல்வேலி அரசு பேருந்து கோட்ட நிர்வாக இயக்குநருடன் டெக்னிக்கல் ஊழியர்கள் சந்திப்பு.


கடந்த 21.07.2023 அன்று மதியம் நிர்வாக இயக்குநரை சந்திப்பதற்கு  நாகர்கோவில் மண்டல தலைவர் ஜஸ்டின்ராஜ், பொதுச்செயலாளர்  கடம்பவேலன் மற்றும் பொருளாளர் லீன்M.பிரசன்னன் உடன் TEPF/vlr தலைவர் அ.பூதலிங்கம் ஆகியோர் நாகர்கோவில் மண்டல தலைமை அலுவலகம் சென்றிருந்தனர். முற்பகலில் தொ.மு.ச சங்க நிர்வாகிகளுடன் நிர்வாக இயக்குநர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையை முடித்துவிட்டு, மேலும் ஒருசில சங்க நிர்வாகிகளும் தனித்தனியாக நிர்வாக இயக்குநரை சந்தித்தனர். 

அப்போது குமரி மாவட்ட தொழில்நுட்ப பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுவை அளித்து அதனை நிறைவேற்றி தருமாறு கேட்டு கொண்டனர். (கோரிக்கை நகல் வெளியிட பட்டுள்ளது). தொடர்ந்து மதியம் 02.30 மணியளவில் தொமுச-வை தவிர்த்து மற்ற சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் சார்பில் லீன்M.பிரசன்னன் உடன் அ.பூதலிங்கம் கலந்துகொண்டார், நிர்வாக இயக்குநர் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

நிர்வாக இயக்குநர் பேசும் போது ஓட்டுனர் நடத்துநர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் ஓட்டுநர் நடத்துனர்கள் O.T பார்த்து அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும். எனக்கூறி தொழிற்சங்கங்களின் கருத்துக்களை கேட்டார்கள். முதலில் ஏடிபி, தொடர்ந்து சிஐடியு, டிடிஎஸ்எப், ஏஐடியுசி நிர்வாகிகள் பேசினர். அதனை தொடர்ந்து தொழில்நுட்ப பணியாளர் சங்கம் சார்பில் அ.பூதலிங்கம் பேசினார்.


அவர் பேசுகையில் தொழிற்சங்கங்களை இரண்டு பிரிவாக பிரித்து கருத்து கேட்பது ஏற்புடையதாக இல்லை என்பதை தெளிவுப்படுத்தினார். அடுத்து O.T க்கு ஆள் பிடிக்க வேண்டிய அவலநிலைக்கு கடந்த அதிமுக அரசு ஆட்குறைப்பு செய்ததுடன் புதிதாக பணியாளர்கள் எடுக்காததும், தற்போதைய திமுக அரசும் புதிய பணியாளர்களை நியமனம் செய்யாமல் இருப்பதும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. தேவையான பணியாளர்களை அவ்வப்போது நியமித்தால் ஓய்வுபெற்ற பணியாளரை O.T க்கு அழைக்க வேண்டிய அவசியம் இருக்காது, O.Tக்கு கட்டாய படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டு இருக்காது. 


இதற்கு நிரந்தர தீர்வு பணியாளர்கள் நியமனம் மட்டுமே. இருந்த போதிலும் பொதுமக்கள் நலன்கருதி பேருந்தை முழுமையாக இயக்கிட ஓட்டுனர் நடத்துனர்கள் ஆதரவு தர தயாராக உள்ளனர். ஆனால் ஓட்டுநர் நடத்துநர்கள் O.T  பார்க்க தயங்குவதற்கான காரணங்களையும் நாம் ஆராய வேண்டும். பேருந்தின் பராமரிப்பு பணிக்கு தேவையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமனம் செய்து, பராமரிப்பு பணிக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்கி கொடுத்து  பிரேக், ஹெட்லைட், வைப்பர் இவைகளை சரி செய்தும் மழை காலங்களில் ஒழுகாத பேருந்துகளையும் வழங்கவேண்டும். 


பேருந்துகள் செல்லும் சாலைகள் குண்டும், குழியும் இல்லாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பேருந்தில் சந்தேகப்படும் வகையில் தெரியும் பெண்களை தெரிந்து அவர்களை கண்டித்தால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கூடாது. படிக்கட்டில் மாணவர்கள் தொங்கி கொண்டு வருவதால் வரும் இடையூறுகள் களையப்பட வேண்டும். மேலும் O.Tக்கான தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். தற்போது கையாள் வேலைக்கு சென்றால் கூட நாள் ஒன்றுக்கு ரூபாய் 850 முதல் 900 வரை வருமானம் கிடைக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 


வழி தடத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்ப்பட்டால் நிர்வாக தரப்பில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். ஒரு விபத்து ஏற்பட்டு ஓட்டுநர் நிரபராதி என நீதிமன்றம் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும். இவையெல்லாம் சரி செய்தால் மட்டுமே ஓட்டுநர் நடத்துநர்கள் தயங்காமல் பணிக்கு வருவார்கள். என எங்கள் சங்கத்தின் கருத்தை தெளிவு படுத்தினார்.


ஒருசில சங்க தலைவர்கள் தங்களுக்கு நல்ல வழி தடம் வேண்டும் என்றும், தங்களுக்கு குறிப்பிட்ட சில பேருந்துகளை தாருங்கள் என்றே கேட்டது வேதனையாக இருந்தது. இறுதியில் நிர்வாக இயக்குநர் பேசும்போது ஓட்டுநர் நடத்துநர்கள் நான்கு முறை O.T பார்த்தால் அவர்களுக்கு விடுப்பு மறுக்க வேண்டாம். பயணியே இல்லை என்றாலும் பேருந்தை கட்டாயம் இயக்க வேண்டும். ஓட்டுனர்களின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம். நடத்துநர்கள் பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பணிக்கு வருவதை யாரும் தடுக்கக் கூடாது. பெயின்டிங் உட்பட ஒருசில பணிகளை தனியாரிடம் விடப்படும் என்றார்கள்.

 

அதற்கு பூதலிங்கம் பதில் அளிக்கையில், அனைத்து பணிகளையும் தனியாரிடம் வழங்குவதை விட  குறைந்த கல்வி தகுதியுடன் வாரிசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு வழங்குங்கள் என கூறினார். ஆனால் நிர்வாக இயக்குநரோ, இது அரசின் கொள்கை முடிவு ஒப்பந்த அடிப்படையில் வந்தால் அவர்களுக்கு வேலை வழங்க தயார் என்றார்கள். டெக்ணிக்கல், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு காசு கொடுக்காமலேயே நல்லதொரு பயிற்சியை இந்த கழகங்கள் வழங்கி வருவதை நினைத்து அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள். 


கருத்தாய்வு கூட்டம் முடிந்தபின்னர் வெளியே வந்தபோது ஏடிபி உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் பூதலிங்கமிடம், நீங்கள்  டெக்ணிக்கல் சங்க தலைவராக இருந்தும் ஓட்டுநர் நடத்துநர் பிரச்சினைகளை தெளிவாக பேசினீர்கள் என கூறி பாராட்டினார்கள். அதற்கு அவர்  பேருந்து இயக்கத்திற்கு டெக்ணிக்கல், ஓட்டுநர், நடத்துநர்கள் (சீருடை தொழிலாளி) என  மூவரும் முக்கிய காரணம் என்பதை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என தெரிவித்து கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad