திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பரப்பாடி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் வசந்த் (34) என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வசந்தின் மனைவி தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கவார்நத்தம் பகுதியிலுள்ள அவரது தந்தை நாகராஜன் (58) வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று (30.07.2023) மேற்படி நாகராஜனின் வீட்டிற்கு வந்த வசந்த் அவரிடம் தகராறு செய்து செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடனே இதுகுறித்து மேற்படி நாகராஜன் அளித்த புகாரின் பேரில் பசுவந்தனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து வசந்த் என்பவரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment