திருநெல்வேலி, ஏப்ரல் 12, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிவிக்கையின்படி வெப்ப சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் ஓரிரு நாட்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவித்து இருந்தது.
அதன் படி இன்று 12.04.2024 காலை முதல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது, குறிப்பாக ஆலங்குளம், பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருகிறது, இதனால் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் உட்புறம் முழுவதும் தேங்கி நிற்கும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை சற்று பதிக்கப்பட்டு இருந்தாலும், கோடை காலத்தில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment