சித்ரா பவுர்ணமி நெல்லை to செந்தூர் சிறப்பு ரயில் சேவை. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 23 April 2024

சித்ரா பவுர்ணமி நெல்லை to செந்தூர் சிறப்பு ரயில் சேவை.

திருநெல்வேலி, ஏப்ரல் 23, நாளை 24.04.2024 சித்திரை பவுர்ணமி முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே
சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது

நாளை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:40 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06853  பயணிகள் சிறப்பு ரயில் காலை 8:15 மணிக்கு திருச்செந்தூர் வந்தடைகிறது.
மேலும் காலை 11:25 மணிக்கு நெல்லையில் புறப்படும் வண்டி எண் 06855 பயணிகள் சிறப்பு ரயிலானது மதியம் 1 மணிக்கு திருச்செந்தூர் வந்தடைகிறது.

மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06854 பயணிகள் சிறப்பு ரயில் காலை 10:50 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.
மற்றும் ஒரு சிறப்பு பயணிகள் ரயில் மதியம் 1:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு மதியம் 3 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது.
என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad