திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே வைகாசி விசாகம் சிறப்பு ரயில்கள் இயக்கம்! - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 18 May 2024

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே வைகாசி விசாகம் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 


திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே வைகாசி விசாகம் சிறப்பு ரயில்கள் இயக்கம்!


திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே வருகிற 22 ஆம் தேதி புதன்கிழமை வைகாசி விசாகத்தையொட்டி 4 சிறப்பு இரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

        
அதன்படி வருகிற 22 ஆம் தேதி புதன்கிழமை திருநெல்வேலியில் இருந்து வண்டி எண் 06857 சிறப்பு பயணிகள் இரயிலானது காலை 6:40 மணிக்கு புறப்பட்டு அன்று காலை 8:15 மணிக்கு திருச்செந் தூர் சென்றடைகிறது.
    மேலும் வண்டி எண் 06859 சிறப்பு பயணிகள் இரயிலானது காலை 11:25 மணிக்கு புறப்பட்டு அன்று மதியம் 1:00 மணிக்கு திருச்செந் தூர் சென்றடைகிறது.மறுமார்க்கத் தில் வண்டி எண் 06858 சிறப்பு பயணிகள் இரயிலானது காலை 9:15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு காலை 10:50 மணிக்கு திருநெல்வேலி சென்ற டைகிறது.மற்றொரு சிறப்பு பயணிகள் இரயில் வண்டி எண் 06860 திருச்செந்தூரிலிருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு அன்று மதியம் 3:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது இதனை தென்னக இரயில்வேயின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad