வள்ளியூரில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா ரிலையன்ஸ் டிரெண்ட் சார்பில் நடத்தப்பட்டது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.
வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கண்காடியா மேல்நிலைப் பள்ளி எஸ்.ஏ நோபுள் உள்ளிட்ட பள்ளிகளில் பயின்று 10,11, மற்றும் 12 ஆகிய வகுப்புகளில் அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு டிரெண்ட் நிறுவனம் சார்பாக மேலாளர் ஜி.குகனேஷ் மாணவ மாணவியரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இதில் வள்ளியூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் ட்ரெண்ட் வள்ளியூர் நிறுவனத்தின் உதவிமேலாளர் சோனியா செல்வன் நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment