கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 7 July 2024

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா

 


கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா 


திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து தை ஒட்டி முப்பெரும் விழா நடைபெற்றது.


காவல்துறை ஆய்வாளர் ஆழ்வார் பேரூராட்சி தலைவர் பார்வதி முன்னிலை வகித்தனர்.


சங்கத் தலைவர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் தலைமை தாங்கினார். செயலாளர் விஸ்வநாதன் வரவேற்றார். தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனரும் துபாய் சமூக நல ஆர்வலருமான முனைவர் முகமது முகைதீன் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் மஞ்சள் பை பயன்படுத்துவோம் என்ற முனைப்பை வலியுறுத்தி பேசினார். பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கிப் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.


நிர்வாகிகள் சமது, ஷரீப், மோகன், ரசாக், டாக்டர் பத்மநாபன், ஷாகித், ஞான ராஜ், கார்த்திக், சாய் சுரேஷ், ஒளி மாலிக், சதீஷ், சந்திரசேகர், மஜீத் , அய்யனார் ஐயப்பன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டு, மஞ்சள் பைகள் இனிப்பு வழங்கப்பட்டது. கல்லிடை ரயில் நிலையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பெற ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.  முடிவில் அப்துல் சமது நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad