ஆடி அமாவாசை திருவிழா சொரிமுத்து அய்யனார் கோவில்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காரையார் சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான ஹிந்து மக்கள் வந்து சொரிமுத்தையனார் சுவாமியை வழிபடுவது பாரம்பரியமாக தொன்று தொட்டு வந்த வழக்கம் என்பதை தாங்கள் அறிவீர்கள். இந்தத் திருநாள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் என்பதையும் தங்கள் அறிவீர்கள். முன்பெல்லாம் அமாவாசை முன்னிட்டு முன்பு 10 நாளும் பின்பு 10 நாளும் ஹிந்து பக்தர்கள் தங்கி இருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வந்தார்கள். தற்போது இருக்கின்ற வனத்துறை மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டினால் ஹிந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குல தெய்வத்தை வணங்க அடுத்தவர்களிடம் கையேந்தி நிற்கும் அவலநிலை தொடர்கிறது. இந்த திருக்கோவிலில் வருகின்ற ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வாகனம் ஜீலை31, மற்றும் ஆகஸ்ட்01,02 ஆகிய தேதிகளில் கோவில் வரை சென்று பக்தர்களை இறக்கி விட்டு திரும்பி வரவும் ஆகஸ்ட் 06, 07 ஆகிய தேதிகளில் கோவில் வரை சென்று திரும்ப அழைத்து வரவும் தாங்கள் அனுமதி தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பாக இன்று அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலகத்தில் திரு இளையராஜா இனை இயக்குனர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது இதில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் MS கண்ணன் சத்சங் மாவட்ட அ அமைப்பாளர் திரு பரமேஸ்வரனந்தா சுவாமி முருகேசன்ஜீ மாரிமுத்து ஜீ பால்ராஜ் ஜீ ஒன்றிய செயலாளர் சசிகுமார் ஒன்றிய துனை தலைவர் ராமசாமி ஜீ செல்லப்பசாமி ஜீ நகர செயலாளர் காளிராஜ் ஜீ வள்ளிநாயகம் ஜீ ஆகியோர் கலந்து கொண்டனர் ஆன்மீக பணியில் விசுவ ஹிந்து பரிஷத் அம்பாசமுத்திரம் நகரம் ஒன்றியம் நெல்லை புறநகர் மாவட்டம்
No comments:
Post a Comment