வடக்கு தைக்கால் தெருவில் குறைந்த மின் அழுத்தத்தை சரிசெய்யும் பொருட்டு ரூபாய்.8,41,180/- மதிப்பீட்டில் புதிய 3 எண்ணம் 25 கேவிஏ . மின் மாற்றிகள் - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 7 August 2024

வடக்கு தைக்கால் தெருவில் குறைந்த மின் அழுத்தத்தை சரிசெய்யும் பொருட்டு ரூபாய்.8,41,180/- மதிப்பீட்டில் புதிய 3 எண்ணம் 25 கேவிஏ . மின் மாற்றிகள்


 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் திரு.செல்வராஜ், அவர்களின் உத்திரவின் படி  திருநெல்வேலி மாவட்டம் (கல்லிடைக்குறிச்சி பிரிவு ) கல்லிடைக்குறிச்சி கோட்ட  செயற்பொறியாளர்    திரு சுடலையாடும் பெருமாள் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படியும் கல்லிடைக்குறிச்சி கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்லிடைக்குறிச்சி பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட  வடக்கு தைக்கால் தெருவில் குறைந்த மின் அழுத்தத்தை சரிசெய்யும் பொருட்டு  ரூபாய்.8,41,180/- மதிப்பீட்டில் புதிய 3 எண்ணம் 25 கேவிஏ  . மின் மாற்றிகள்  06.08.2024 அன்றுமேற்பார்வை பொறியாளர் திரு.செல்வராஜ் அவர்கள் மற்றும் கல்லிடைகுறிச்சி கோட்ட செயற்பொறியாளர் திரு சுடலையாடும் பெருமாள் அவர்களால்பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைக்கும் மேலும் அப்பகுதியில்  மக்களின் இல்லங்களில் தாழ்வழுத்த குறைபாடு சரிசெய்யப்பட்டு மேம்படும். இந்நிகழ்ச்சியில் மேற்பார்வை பொறியாளர் திரு.செல்வராஜ் அவர்கள் மற்றும் கல்லிடைகுறிச்சி கோட்ட செயற்பொறியாளர் திரு சுடலையாடும் பெருமாள் அவர்கள் மற்றும்   இளநிலைமின் பொறியாளர்  திரு.மு.குமார் அவர்கள், மாஞ்சோலை இளநிலை மின் பொறியாளர் திரு.மு.மாதவன் அவர்கள் மற்றும் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் திரு.க.இசக்கிபாண்டியன்  மற்றும் கள பணியாளர்கள், வடக்கு தைக்கால் தெரு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad