பாளையங்கோட்டை, ஆகஸ்ட்.15, பாளையங்கோட்டை லயன்ஸ் சங்கம் சார்பில் மேலநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை ஆவுடை தங்கம் முன்னிலையில் தலைவர் லயன் சோபிராஜ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சங்கத்தின் செயலாளர் லயன்.எஸ். தம்பான், பொருளாளர் லயன் பாலகாந்த், துணைத் தலைவர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, மற்றும் சங்க உறுப்பினர்கள் புன்னைச்செழியன், சக்திவேலாயுதம், பிரபு, ஆரோக்கியராஜ், ஆரோக்கியசாமி, ஊர்த் தலைவரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான பேச்சி ஆகியோர் சுதந்திர தின வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார். ஆசிரியர்கள் மாரியம்மாள், பூரணி மற்றும் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாணவ - மாணவிகள் அனைவருக்கும் கல்வி உபகரணப் பொருட்களும் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment