திருநெல்வேலி, ஆகஸ்ட்.15, திசையன்விளை லயன் சங்கத்தில், இந்த ஆண்டிற்கான புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று 14.08.2024 மாலை 7 மணிக்கு குருநாதன் மஹாலில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த முன்னாள் ஆளுநர் லயன் எச்.முகமது அலி லயன்ஸ் சங்க புதிய பொறுப்பாளர்களாக லயன் சிவகுமார் தலைவராகவும், லயன் தங்கையா ஜி பி எம் குமார் செயலாளராகவும், லயன் ராஜேந்திரன் பொருளாளராகவும் செயல்பட பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னாள் லயன் சங்க ஆளுநர் லயன் சுயம்பு ராஜன் சிறப்பி விருந்தினர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
முதலாம் துணை ஆளுநர் லயன் ஷாஜகான் சுமார் 200ககும் மேற்பட்டவர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள், சுய தொழில் தொடங்க தேவையான பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், நலிவுற்றோருக்கு புத்தாடைகள் போன்றவற்றை வழங்கும் விதமாக சேவை திட்டத்தை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இரண்டாம் துணை ஆளுநர் லயன் வெற்றிச்செல்வன் திசையன்விளை லயன்ஸ் சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் திசையன்விளை சுற்றுவட்டார பள்ளிகளில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கும், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் மாவட்ட அமைச்சரவைச் செயலாளர் லயன் எம் எஸ் டி ராஜா, மண்டல தலைவர் லயன் சகாயத் டெலிவர், வட்டார தலைவர் லயன் சக்தி வெங்கடேஷ், மாவட்ட பொறுப்பாளர் பதவி ஏற்பு விழா லயன் டட்லி ஃபென் மற்றும் லயன் ஜான் சுபாஷ் மற்றும் லயன் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். லயன் ராஜா முருகானந்தம் லைன் வீரராஜன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். முடிவில் லயன் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
தென்மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment