புளியங்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 19 August 2024

புளியங்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

புளியங்குடி,ஆக. 19 : 78 வது இந்திய சுதந்திர தினம் மற்றும் அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) 10 மாதகால செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் புளியங்குடி அனைத்து கிளைகள் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் தலைமை வகித்தார். 

தென்காசி மாவட்டம் மற்றும் புளியங்குடி அனைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் பேரணியை புளியங்குடி காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி துவக்கி வைத்தார் புளியங்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று டி என் புதுக்குடி காமராஜர் சிலை அருகில் முடிவடைந்தது. 

நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்ட பேரணியின் இறுதியில் மாநில செயலாளர் முஹம்மது ஒலி உரையாற்றினார் !
அவரது உரையில் நாட்டில் சமிபகாலமாக அதிகரித்துள்ள போதைப் பொருள் பயன்பாட்டினை சமுகத்தில் இல்லாதாக்கி சமுத்துவமான சமுகம் உருவாக போதை பொருள் ஒழிப்பில் அனைத்து சமுகத்தினரும் பாகுபாடுல்லாமல் பாடுபடவேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் சிறுவர்களிடையே அதிகரித்துள்ள கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடவும் அவர்களை நேர்வழிப்படுத்தவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் அனைத்து வகையான பிரச்சாரங்களுக்கு பொதுமக்களிடையே ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும் கோரினார் இறுதியில் மாவட்ட துணை செயலாளர் ஹாஜா மைதீன் நன்றியுரை ஆற்றினார். 

பேரணிக்கான ஏற்ப்பாட்டினை புளியங்குடி அனைத்து கிளை நிர்வாகிகள் அப்துந் நாசர் , செய்யது இப்ராஹிம், முஹம்மது காசிம் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டரணியினர் சிறப்பாக செய்திருந்தனர் .

No comments:

Post a Comment

Post Top Ad