நெல்லை - பாப்பாகுடி அருகே போதை ஒழிப்பு பேரணி. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 1 September 2024

நெல்லை - பாப்பாகுடி அருகே போதை ஒழிப்பு பேரணி.

திருநெல்வேலி, செப் 01, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை  மாவட்டத்தின் பள்ளக்கால் கிளையின் சார்பாக போதை ஒழிப்பு பேரணி(31/08/24) சனிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.


இந்த பேரணியில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர், 
துவக்க உரையாக மாவட்ட பேச்சாளர் பேட்டை சம்சுதீன் பேசினார், அதைத்தொடர்ந்து
மாவட்ட பேச்சாளர் பள்ளக்கால் ரஹ்மத்துல்லா, இப்பேரணியின் நோக்கம், போதை பழக்கத்தால்
இளைஞர்கள் அடையும் பாதிப்பு மற்றும் பூரண மது ஒழிப்பின் அவசியம் குறித்து பேசினார்.

போதை பொருட்கள் அதிகம் நடமாடும் தமிழகத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது, இப்பொறுப்பை உணர்ந்து தமிழக அரசு போதை பொருள் ஒழிப்பில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பேசினார்.    


அதைத்தொடர்ந்து ஆண்களும்
பெண்களும், இளைஞர்களும் கைகளில் பதாகைகளை ஏந்தியவர்களாக பேரணி பள்ளக்கால் பஜார் திடலில் துவங்கி பள்ளக்கால் பள்ளிவாசல் பஸ் ஸ்டாப்பில் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad