செப். 02, திருநெல்வேலி மாவட்டம் பள்ளக்கால் புதுக்குடியில் நடைபெற்று வரும் பைஜூல்- லின்-நிஸ்வான் பெண்கள் அரபிக் கல்லூரியில் 01.09. 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பத்தாவது பட்டமளிப்பு விழா மற்றும் 13ம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஷேக் மீரான் மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்றது
பள்ளக்கால் ஜமாஅத் நிர்வாகிகள் ஜபருல்லா கான், ஷேக் மியான், அசன் அலி, சாகுல் ஹமீது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளக்கால் இமாம் முஹம்மது கனிமத்துல்லாஹ் பைஜி வரவேற்புரை ஆற்றினார். சென்னை யூனிஸ் அகாடமி ஆய்வாளர் முகமது அலி நூரி, அம்பை இமாம் அபுல் ஹஸன் மிஸ்பாஹி, வி.கேபுரம் இமாம் யாஸீன் ரஹீமீ, வீரவநல்லூர் இமாம் ஹபீபுல்லா மன்பஈ, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலச்சவல் இமாம் ஹாஜா ஹுஸைன் உஸ்மானி சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் அம்பை வட்டார உலமாக்கள், ஜமாஅத் நிர்வாகிகள், ஆலிமாக்கள், மற்றும் ஊர் பொதுமக்கள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment