பாளை ரெட்டியார்பட்டி புறவழிச்சாலையில் விபத்து அக்கா-தம்பி உயிரிழந்தனர்.
திருநெல்வேலி கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டியார் பட்டி அருகே இன்று(03-09-2024) அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்து ஏற்பட்டது.
விபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த செல்லையன் என்பவரின் மகன் 49 வயதான ஜெயச்சந்திர சிங்(அரசு விரைவு போக்குவரத்துக்கழக ஓட்டுநர்)மற்றும் அவரது சகோதரி 50 வயதான மணலி விலையை சேர்ந்த சைலஜா ஆகிய இருவரும் பலி.
இவர்கள் ஓட்டி வந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடலினை மீட்ட தீயணைப்பு துறையினர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment