எம்பவர் இந்தியா மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தின கருத்தரங்கு. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 September 2024

எம்பவர் இந்தியா மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தின கருத்தரங்கு.

எம்பவர் இந்தியா மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தின கருத்தரங்கு

எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து உலக நோயாளிகள் பாதுகாப்பு தின கருத்தரங்கை திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் நடத்தியது. எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் தலைமை தாங்கினார். அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மீனாட்சி வரவேற்புரையாற்றினார்.

தூத்துக்குடி இந்திரா சர்க்கரை நோய் மருத்துவமனை சிறப்பு மருத்துவர் அருள்பிரகாஷ் கருத்துரையாற்றும் போது கூறியதாவது : உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் 2019 லிருந்து உலக சுகாதார அமைப்பால் அனுசரிக்கப்படுகிறது. மருத்துவ சேவைகளைப் பெறும் நோயாளிகளின் மருத்துவப் பராமரிப்பில் எந்த வித இடறலும் ஏற்படாதவாறு மருந்துகளைப் பரிந்துரைப்பதோடு அதில் மருத்துவப் பிழை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவக் குழுவின் முறையான ஒருங்கிணைப்புடன் மருந்தின் பக்க விளைவுகள் மற்றும் மருந்து உட்கொள்ளும் முறை ஆகியவற்றை நோயாளிகளுக்கு கற்பிப்பதன் மூலம் மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம் எனக் கூறினார்.

அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர் சிவகுமார் நன்றியுரை கூறினார். கருத்தரங்கில் மலேசிய நாட்டின் பயிற்சி மருத்துவர் யுவேதா இந்திரன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad