தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கான கால்பந்து பிரிவில் 48 அணிகள் கலந்து கொண்டன. அதில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் சூப்பர் சீனியர் அணி பிரிவு மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் பரிசுத்தொகையாக அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் அணி வீரர்களுக்கு பரிசுக்கோப்பை வழங்கி பாராட்டினார். உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், அறிவியல் ஆசிரியர் ஜெனிங்ஸ் காமராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வ சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment