சங்கரன்கோவில். செப்.28.
சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயத்துறை அமைச்சர் பன்னீர் செல்வத்தை சென்னையில் நேரில் சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது ,
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் ஒன்றியம், குருவிகுளம் ஒன்றியம் ,மேலநீலிதநல்லூர் ஒன்றியம், மானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கரன்கோவில் தொகுதியில் அடங்கும் கிராமங்கள் ஆகியவற்றில் உள்ள விவசாயிகளுக்கு கடந்த 2023 -2024 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதை உடனடியாக வழங்கினால் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் பன்னீர்செல்வம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment