தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார் தேவர் மகாசபை திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், தலைமை தாங்கினார்.
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகள் பெற்றுத் தந்த பொறுப்பாளர்களுக்கு ரொக்க பரிசும் நினைவு பரிசு மாவட்ட செயலாளர் வழங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா பேசும் பொழுது திராவிட ஆட்சியில் மூன்று ஆண்டு காலம் மக்களுக்கு செய்த சாதனைகளால் பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளோம். தமிழகத்தில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் மீதம் வழங்கிக் கொண்டிருக்கிறது என்று புள்ளி விவரம் சொல்கிறது இலவச பேருந்து இலவச அரிசி கலைஞர் உதவி தொகை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும்.
உதவித்தொகை போன்றவற்றின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் பலன் பெற்று வருகிறது அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் கலைஞர் உரிமை தொகை கிடைக்காத அனைவருக்கும் பெற்றுக் கொடுக்கப்படும் திமுக துவக்கப்பட்ட 75 ஆண்டுகள் நிறைவு பெற்றது ஒட்டி பவள விழா கொண்டாடப்படுகிறது
அமெரிக்காவில் இருந்து கொண்டு நமது தானைத் தலைவர் அறிவித்துள்ளபடி ஒவ்வொரு தொண்டனின் வீடுகளிலும் கருப்பு சிவப்பு கொடி ஏற்றப்பட வேண்டும்.
தமிழகத்தில் இரண்டு கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் திமுக ஆகும் எனவே வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி கழக உறுப்பினர்களின் இல்லங்களில் அனைத்திலும் இரு வண்ணக் கொடி ஏற்றி சிறப்பு செய்ய வேண்டும், கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது. அனைவருக்கும உறுப்பினர் அட்டை கொண்டு செல்லும் வண்ணம் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு பேசினார் நீண்ட காலமாக வீடுகள் கட்டி மின்சார வசதி கதவு எண் குடிநீர் வசதி அனைத்தும் தரப்பட்டாலும் அங்கீகாரம் இல்லாத மனை பிரிவு என்று சொல்லி ரோடு வசதி பத்திரப் பதிவு செய்ய வசதி செய்தி தரப்பட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர் கட்சி நிர்வாகிகள் கூறிய கோரிக்கைகளை அமைச்சரிடம் சொல்லி நிறைவேற்றி தரப்படும் என உறுதி கூறினார் ஒன்றிய கவுன்சிலர் முனியராஜா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment