வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் துவங்கி விட்டது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனால் அவ்வப்போது ராதாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று ராதாபுரம் , வடக்கன்குளம்,சமூகரெங்கபுரம் சுற்று வட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ராதாபுரம் காவல் நிலையம் முன்பு மழை நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்பதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மழை நீர் கால்வாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரி பல்வேறு அமைப்புகள் வருகின்ற திங்கள்கிழமை ராதாபுரம் பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பது குறுப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment