தென்காசி நவ, 18, தென்காசியில் மாவட்ட பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பில் அமரன் திரைப்படத்திற்கு 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி, இந்திய நாட்டிற்காக தன்னை அர்பணித்துக்கொண்ட மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு மற்றும் நமது தேசத்தை அல்லும் பகலும் நம் போர் படை வீரர்களைப் பற்றியும், அவர்களின் வாழ்வியல் முறைகளைப்பற்றியும் எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களால் போற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்திரைப்படம் மாணவர்களிடத்தில் தேசப்பற்றை கொண்டு சென்று, தாக்கத்தை ஏற்படுத்தும், இந்திய திருநாட்டை காக்க ஒவ்வொரு ராணுவ வீரர்களின் கடமை மற்றும் தியாகம் என்ன என்பதை அறிந்து கொள்ள உதவும் என்ற வகையில் பாஜக தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ்ராஜா ஆலோசனையின் படி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவர் பென்னுலிங்கம் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டின் பேரில்
நேற்று மாலை 6 மணிக்கு தென்காசி பி.எஸ்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையங்கத்தில் 100க்கு மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்து செல்லப்பட்டு அமரன் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஜமீன்முத்துக்குமார், விஷ்ணுகுமார், தென்காசி நகர தலைவர் முத்துச்செல்வன், துணைத் தலைவர் சுபாஷ், செங்கோட்டை நகர தலைவர் லட்சுமணன், துணைத் தலைவர் வீரகுமார், செங்கோட்டை ஒன்றிய தலைவர் கண்ணபிரான் துணை தலைவர் சிவா,
தென்காசி தெற்கு ஒன்றிய துணை தலைவர் சுப்ரமணியன், தென்காசி நகர பாஜக தலைவர் மந்திரமூர்த்தி பொதுச் செயலாளர் சேகர் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் குத்தாலிங்கம் ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பிஎல்எம் கன்ஸ்ட்ரக்சன் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகடாமி உரிமையாளர் முரளி கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment