பஞ்சசீலம் அறக்கட்டளை சார்பில் நக்கநேரி கிராமத்தில் பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 30 November 2024

பஞ்சசீலம் அறக்கட்டளை சார்பில் நக்கநேரி கிராமத்தில் பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

பஞ்சசீலம் அறக்கட்டளை சார்பில் நக்கநேரி கிராமத்தில் பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள நக்கநேரி கிராமத்தில் பஞ்சசீலம் அறக்கட்டளை சார்பில் மாலைநேர பாடசாலை , பனைவிதை நடவு மற்றும் மரக்கன்றுகள் நடவு நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சசீலம் அறக்கட்டளை நிறுவனர் கலைச்செழியன் தலைமை வகித்தார். சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். 

மகளிர் ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தனக்கர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுயம்புலிங்கதுரை, துணை தலைவர் செம்புகுட்டி, 

வள்ளியூர் வடக்கு ஒன்றிய திமுக பொருளாளர் வேலு, நம்மால் முடியும் குழு தலைவர் காமராஜ் , வள்ளியூர் வட்டார பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் மோகனசுந்தரம், இயற்கை விவசாயிகள் பால்பாண்டி . சிவகுமார் , ஜெயக்குமார், தனக்கர்குளம் ஊராட்சி பசுமை இயக்க தலைவர் இசக்கியப்பன், 

தனக்கர்குளம் ஊராட்சி பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் சந்திரகுமார், ராதாபுரம் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் மணி , சவுகை பசுமை நாயகன் சிவகுரு, அபிமன்யூ ரோப் அக்சஸ் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் பாலன், சிஇஓ உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வள்ளியூர் கலசம் ஹரீஷ், 

பஞ்சசீலம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயா , சாரதா , சாந்தி , சமூக ஆர்வலர் இந்திரன், ஏஐஆர்டி சேர்மகனி ஆகியோர் இணைந்து மரகன்றுகள் மற்றும் பனைவிதைகள் நடவு செய்யப்பட்டது. 

இந்நிகழ்ச்சி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad