ராதாபுரம் அருகே பட்டபகலில் தோட்டத்தில் உள்ள மின் வயரை திருடி செல்லும் மர்ம நபர். சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே பாஸ்கர் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். ஆழ்துளை கிணறு மூலம் பாசனம் செய்து தோட்டத்தில் தென்னை, வாழை பயிறுட்டு உள்ளார்.
போர்வெல்லில் இருந்து மின்மோட்டாருக்கு செல்லும் மின்வயரை பட்டபகலில் மர்மநபர் ஒருவர் எந்தவித பதட்டமும் இல்லாமல் வெட்டி எடுத்து சுருட்டி கொண்டு சென்றுள்ளார். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இது குறித்து ராதாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment