தென்காசி மாவட்டத்தில், கடந்த டிசம்பர் 13, 14 ஆகிய நாட்களில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தின் போது ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணிகள் தற்காலிகமாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் அருவி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரடியாக ஆய்வு செய்தனர்.
பின்னர் இன்று முதல் சுற்றுலா பயணிகளை அருவியின் ஓரமாக நின்று குளிக்க அனுமதி வழங்கினர்.
தகவல் வழங்குபவர் நெல்லை செய்தியாளர் தங்கராஜ்
No comments:
Post a Comment