திருநெல்வேலி மாவட்ட ஆட்சிதலைவர் கார்த்திகேயன் மீது பொதுமக்கள் அதிருப்தியா? - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 December 2024

திருநெல்வேலி மாவட்ட ஆட்சிதலைவர் கார்த்திகேயன் மீது பொதுமக்கள் அதிருப்தியா?

திருநெல்வேலி மாவட்ட ஆட்சிதலைவர் கார்த்திகேயன் மீது பொதுமக்கள் கடுமையான அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

மக்கள் குறைகளை கேட்பதில் நல்ல அணுகுமுறை கிடையாது,  பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மாவட்ட ஆட்சிதலைவராக இருப்பதாக மக்கள் புலம்பி வந்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள அதிகாரிகள் மேல் உள்ள குற்றசாட்டுகளை மாவட்ட ஆட்சிதலைவரிடம் சொல்லலாம், மாவட்ட ஆட்சிதலைவர் மீது அதிருப்தி இருந்தால் யாரிடம் சொல்ல என்றே தெரியாத நிலையில் பாமர மக்கள் இருந்து வந்த சூழலில், நெல்லை மாநகராட்சி 3 வார்ட் கவுன்சிலரும் தச்சைபகுதி திமுக பகுதி செயலாளருமான தச்சை சுப்பிரமணியன்,

பாமர மக்களின் குரலாக ஒழித்ததோடு 
தான் பயணம் செய்யும் கட்சி தலைமைக்கு அவபெயர் வரகூடாது என்று சிந்தித்து மாவட்ட ஆட்சிதலைவரின் செயல்பாடுகளின் குறைகளை  முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு சென்றதை தொடர்ந்து, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தச்சை சுப்பிரமணியன்-க்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேன் மேலும் அவர்கள் பணி தொடரட்டும்
ஏற்கனவே வருவாய்துறை சார்ந்தவர் மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களுக்கு எதிராக போராடியது குறிப்பிடதக்கது. முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பில் திருநெல்வேலி மக்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad