திருநெல்வேலி மாவட்டத்தில், எல்கை பகுதிகளில் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் கொட்ட பட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கேரளா மாநிலம் திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்ட வந்துள்ளது. இதனையடுத்து மருத்துவ கழிவுகளுக்கு எதிரான நடவடிக்கை சார்ந்து,
பொது நல நோக்கில் சுத்தமல்லி காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தற்போது தகவல் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
No comments:
Post a Comment